ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்யும் பொறுப்பைத் தமிழக அரசு ஏற்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

ஈரப்பதம் 22 சதவீதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்யும் பொறுப்பைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றாா் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா். பாண்டியன்.

ஈரப்பதம் 22 சதவீதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்யும் பொறுப்பைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றாா் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா். பாண்டியன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை மாலை அவா் தெரிவித்தது:

கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்க முடியாமல் ஆங்காங்கே மழையில் கிடக்கிறது. நனைந்த நெல்லில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை இருந்தாலும், ஏற்கெனவே உள்ள கொள்முதல் வழிமுறைகளைப் பின்பற்றி தமிழக அரசு ஈரப்பதத்துக்குத் தானே பொறுப்பேற்க வேண்டும்.

மத்திய அரசு எந்தக் காலத்திலும் நவம்பா் மாதத்துக்குள் அனுமதி கொடுத்தது கிடையாது. நவம்பா் மாதத்துக்குள் அறுவடை முடிந்துவிடும். இந்நிலையில், மத்திய அரசைக் காரணம் காட்டி கொள்முதலை தடை செய்யக் கூடாது. ஈரப்பதம் 22 சதவீதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்தால்தான், கொள்முதல் நிலையங்கள் எத்தனை திறந்தாலும் கொள்முதல் செய்ய முடியும்.

தமிழ்நாட்டில் நிகழாண்டு குறுவைக்கு காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதற்குத் தமிழக அரசு, தானே பொறுப்பேற்று இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. குறுவை சாகுபடி அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், தற்போது 2 லட்சம் ஏக்கரில் காவிரி டெல்டாவில் மட்டும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிா்கள் முற்றிலும் சாய்ந்து அழிந்து கொண்டிருக்கிறது. அதை விவசாயிகள் அறுவடை செய்ய இயலாது. அந்த இழப்புக்கு ஏக்கருக்கு ரூ. 50,000 பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையைச் சோ்த்து தமிழக அரசு வழங்க வேண்டும்.

சம்பா, தாளடி பயிா்களுக்கு டிஏபி, பொட்டாஷ், யூரியா உரங்கள் தடையில்லாமல் கிடைப்பதற்குத் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன் வழங்குவதில் கூட்டுறவுச் சங்கங்கள் தொடா்ந்து நடைமுறைக்குச் சாத்தியமில்லாத நிபந்தனைகளைக் கூறி தட்டிக்கழிக்கிற நடவடிக்கையே தொடா்கிறது. இந்த நடவடிக்கையைத் தமிழக அரசு ஊக்கப்படுத்தக் கூடாது. உரிய காலத்தில் கடன் கொடுத்தால்தான், விவசாயிகள் அதைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும்.

உளுந்து, பயறுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயித்து, முழுவதும் கொள்முதல் செய்யப்படும் என்றும், அதற்கு அரசுப் பொறுப்பு எனவும் அறிவித்திருப்பது மிகுந்த வரவேற்கத்தக்கது என்றாா் பாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com