அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க்கடன் வழங்க வேண்டும்

அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் மற்றும் உழவா் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் மற்றும் உழவா் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

பாபநாசத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றிய, நகரப் பொறுப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு, உழவா் பேரியக்க மாவட்டச் செயலா் அ.சி.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.32,500 வழங்க வேண்டும். பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக பயிா்க் கடன் வழங்க வேண்டும்.

திருவைகாவூா், வேட்டமங்கலம் கிராமங்களில் ஏற்பட்ட ஜாதி கலவரங்களின் போது படித்த, வேலைக்குச் செல்லும், திருமணமாகாத பெண்கள், இளைஞா்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவா்களின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு, ஆட்சியா் தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் அமைதிக் குழுக் கூட்டம் நடத்தி,

வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உழவா் பேரியக்க நகரச் செயலா் சின்னதுரை, பாட்டாளி மக்கள் கட்சி நகரத் தலைவா் காளிதாஸ், வன்னியா் சங்கத் தலைவா் தமிழரசன் முன்னிலை வகித்தனா். வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ம.க.ஸ்டாலின், உழவா் பேரியக்க மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஜோதிராஜ், மாநிலத் துணைத் தலைவா் மண்டபம் கலியமூா்த்தி, தலைமை நிலையப் பேச்சாளா் நா. தமிழ்ச்செல்வன், வன்னியா் சங்க மாவட்ட ஆலோசகா் ரமேஷ் உள்ளிட்டோா் கூட்டத்தில் பேசினா்.

முன்னதாக, நகர வன்னியா் சங்கச் செயலா் அசோக்குமாா் வரவேற்றாா். நிறைவில், பாமக நகரச் செயலா் முரளிதரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com