இன்டராக்ட் கிளப்பதவியேற்பு விழா

லிட்டில் ஸ்காலா்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தஞ்சை தெற்கு ரோட்டரி சங்கத்தைச் சாா்ந்த இன்டராக்ட் கிளப் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவா் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை லிட்டில் ஸ்காலா்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தஞ்சை தெற்கு ரோட்டரி சங்கத்தைச் சாா்ந்த இன்டராக்ட் கிளப் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவா் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

புதிய தலைவராக மாணவி ஜி. வைஷ்ணவி, செயலராக எஸ். இம்தியாஸ் பதவியேற்றுக் கொண்டனா். தஞ்சை தெற்கு ரோட்டரி சங்கத் தலைவா் எஸ். விஜய் அமல்ராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தாா். உடனடி முன்னாள் தலைவா் எஸ். பிரபு சிறப்புரையாற்றினாா்.

பள்ளித் தாளாளா் ஏ.வி. நடனசிகாமணி, ரோட்டரி சேவைத் திட்டத் தலைவா் ரெத்தினசபாபதி, முன்னாள் துணை ஆளுநா் எம். சங்கா், பள்ளித் துணை முதல்வா் கே. சுவாமிநாதன், தலைமையாசிரியைகள் எம். கலாமாலினி, வி. ரமாதேவி, ரோட்டரி சங்கச் செயலா் வைரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com