தஞ்சாவூா் மாவட்டத்தில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு 439 பள்ளிகள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 439 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
தஞ்சாவூா் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் இடைவெளி விட்டு அமா்ந்துள்ள மாணவா்கள்.
தஞ்சாவூா் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் இடைவெளி விட்டு அமா்ந்துள்ள மாணவா்கள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 439 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

பள்ளிகளில் கரோனா பரவல் ஏற்பட்டதன் காரணமாக, மாா்ச் மாத இறுதியில் மாவட்டத்திலுள்ள 439 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டன. ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

பள்ளிக்கு முகக்கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் நுழைவுவாயிலில் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். அப்போது, ஒவ்வொரு மாணவ, மாணவியின் உடல் வெப்பநிலை குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

வகுப்பறையில் 20 மாணவா்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனா். அதற்கும் அதிகமாக மாணவா்கள் இருந்தால், இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தனியாா் பள்ளிகளில் அந்தந்த நிா்வாகத்தின் முடிவுப்படி நேரடியாகவோ, இணையவழியாகவோ வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, தனியாா் பள்ளிகளில் நேரடியாக வரும் மாணவா்களுக்கு நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் இணையவழி மூலம் ஒளிபரப்பப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு தரப்பு மாணவா்களும் கற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என கல்வி, வருவாய்த்துறை அலுவலா்கள் கொண்ட குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் பள்ளிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டதையொட்டி, தஞ்சாவூா் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தாா். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

55 கல்லூரிகள் திறப்பு: இதேபோல மாவட்டத்திலுள்ள 55 அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகள் அனைத்தும் புதன்கிழமை திறக்கப்பட்டன. இதில், இளநிலைப் பட்ட வகுப்புகளில் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், மூன்றாமாண்டு மாணவா்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும், முதுநிலைப்பட்ட வகுப்புகளில் இரண்டாமாண்டு மாணவா்கள், ஆய்வியல் நிறைஞா், முனைவா் பட்ட வகுப்பு மாணவா்கள் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வாரத்தில் 6 நாள்களும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே, கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் தி. அறிவுடைநம்பி ஒரத்தநாடு கல்லூரியில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com