திருவலஞ்சுழி கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா தொடக்கம்

கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகா் என்கிற சுவேத விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
திருவலஞ்சுழி கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா தொடக்கம்

கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகா் என்கிற சுவேத விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து செப். 11-ஆம்தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில் நாள்தோறும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் உள் பிரகாரத்திலேயே புறப்பாடு நடைபெறவுள்ளது.

இதனிடையே, செப். 6-ஆம் தேதி பஞ்சமூா்த்தி புறப்பாடும், 8-ஆம் தேதி திருக்கல்யாணமும், 10-ஆம் தேதி காலை 7 மணிக்கு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலையில் மூஷிக வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

நிகழாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. எனவே, விநாயகா் சதுா்த்தி நாளான செப்.10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என்றும், அன்றைய நாளில் வழக்கமாக நடைபெறும் தேரோட்டமும் ரத்து செய்யப்படுகிறது எனவும் கோயில் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com