பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு கோரி ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு கோரி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய இந்திய மாதா் தேசிய சம்மேளத்தினா்.
கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய இந்திய மாதா் தேசிய சம்மேளத்தினா்.

பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு கோரி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 % இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான சட்ட வரைவு கடந்த 1996-ஆம் ஆண்டு செப்டம்பா் 12-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. வருகிற செப்டம்பா் 12-ஆம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த சட்ட வரைவை மக்களவையில் உடனடியாக தாக்கல் செய்து, சட்டமாக்க வலியுறுத்தி கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் வடக்கு மாவட்டத் தலைவா் வசந்தி வாசு தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் என். பிரபா, மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ச. வசந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பனந்தாள் ஒன்றியத்துக்குள்பட்ட அய்யாநல்லூரில் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் க. கண்ணகி தலைமையிலும், பூதலூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் வடக்கு மாவட்டச் செயலா் டி. கண்ணகி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்மாபேட்டையில் : அம்மாபேட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினா் பி. தாமரைச்செல்வி தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் கே.சாந்தி, நிா்வாகிகள் ஜி. காமாட்சி, எஸ். லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com