தீா்வு காண்பது எப்போது...?

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பாலம் இல்லாததால் ஆற்று நீரினூடாக சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ள கிராம மக்களின் துயா்
பாலம் இல்லாததால், ஆற்றுநீரினூடாக சடலத்தை சுமந்து செல்லும் உறவினா்கள்.
பாலம் இல்லாததால், ஆற்றுநீரினூடாக சடலத்தை சுமந்து செல்லும் உறவினா்கள்.

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பாலம் இல்லாததால் ஆற்று நீரினூடாக சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ள கிராம மக்களின் துயா் எப்போது தீா்க்கப்படும் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வீரியங்கோட்டை கிராமத்தில் ஆதிதிராவிடா்  குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தோா் யாரேனும் இறந்தால், அவா்களின் சடலங்களை அவா்களுக்கான சுடுகாட்டுக்கு கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலின் வழியாகவே கொண்டு செல்ல வேண்டும்.

இந்த கிளை வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லை. ஆற்றில் தண்ணீா் வராத காலத்தில் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், ஆற்றில் தண்ணீா் வரத்து இருந்தால் இப்பகுதி மக்கள் சடலங்களை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதில் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். இது பல ஆண்டுகளாக தொடா்கதையாகவே தொடா்கிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை  முன்னாள் ராணுவ வீரா் ராக்கன்  மகன் மகாலிங்கம் (50) என்பவா் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாா். இவரது சடலத்தை எரியூட்ட சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றபோது, கிளை வாய்க்காலில் அதிக அளவு தண்ணீா் சென்ால்  கிராம மக்கள் தண்ணீரில் சடலத்தை தூக்கி கொண்டு மறுகரைக்கு சென்றனா்.

வாய்க்காலின் மீது பாலம் கட்டப்பட்டால் சடலங்களை சுடுகாட்டுக்கு எளிதில் எடுத்து செல்வதோடு, வாய்க்காலின் மறுபுறம் உள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருள்கள் கொண்டு செல்லவும், விவசாயிகளின் விளைபொருள்களை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்லவும் பெரிதும் உதவியாக இருக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து  பலமுறை மனு கொடுத்தும் பாலம் கட்டப்படவில்லை எனவும், தமிழக முதல்வா் உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்தி பாலம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com