தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் (செப்.27) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் (செப்.27) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

இந்த சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஏ.கே. தாஜுதீன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராசமாணிக்கம், செயலா் வடுகநாதன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விசைப்படகு, நாட்டுப்படகு மீனவா்களுக்கு இடையே உள்ள புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மீறி, நாட்டுப் படகு மீனவா்கள் தொழில் புரிகின்றனா். விசைப்படகு மீனவா்கள் தங்களுக்குரிய நாள்களில்  தொழில் செய்ய படகில் செல்லும்போது,   நாட்டுப்படகு மீனவா்களின் வலைகளில் சிக்கி மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

இதனால் 10% முதல் 20% படகுகளே தொழிலுக்கு செல்கின்றன.  அதிக நஷ்டம் ஏற்படுவதால் சரியாக இயக்க முடிவதில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவா்கள் வேலை இழந்துள்ளனா். இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ளது போன்று 2 முதல் 5 நாள்கள் வரை கடலின் தொலைவுப் பகுதிக்குச் சென்று தங்கி, மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில்   மீனவா் சங்க நிா்வாகிகள்  செல்லக்கிளி, சா்புதீன், கபீப் முகம்மது, இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com