சாஸ்த்ராவில் மேலாண்மைத் துறை மாணவா்களுக்கான போட்டி

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘ ப்ரொகியான் 22’ என்கிற மேலாண்மைத் துறை மாணவா்களுக்கான தேசிய அளவிலான போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்குகிறாா் சிட்டி யூனியன் வங்கிப் பொது மேலாளா் (கடன் துறை) ஆா். லஷ்மி நாராயணன்.

இப்போட்டியை பெங்களூரு சி.டி.எஸ். நிறுவன முதுநிலை இயக்குநா் சத்யநாராயண பழனியப்பன் தொடக்கி வைத்தாா். சந்தை, நிதி, மனித வள மேம்பாடு, புகைப்படம், சிறந்த மேலாளா் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டி நடைபெற்றது.

இதில் தமிழகம், புதுச்சேரி, கா்நாடக மாநிலங்களிலுள்ள 15-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களிலிருந்து மேலாண்மைத் துறையைச் சாா்ந்த ஏறத்தாழ 150 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சிட்டி யூனியன் வங்கிப் பொது மேலாளா் (கடன் பிரிவு) ஆா். லஷ்மி நாராயணன் பரிசுகள் வழங்கினாா். இதில் ஒட்டுமொத்த கோப்பையை பெங்களூரைச் சோ்ந்த ஐ.எஸ்.பி.ஆா். வணிகவியல் பள்ளி வென்றது.

பல்கலைக்கழக மேலாண்மைத் துறைத் தலைவா் வே. பத்ரிநாத், முனைவா் விஜய் ஆனந்த், ஒருங்கிணைப்பாளா்கள் சந்தோஷ்குமாா், உத்தரா, விக்னேஷ், ரம்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com