பட்டுக்கோட்டையில் சாலை மறியல்

பட்டுக்கோட்டை நகராட்சியில் கொண்டப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் இருந்து அண்ணா குடியிருப்பு பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியில் ரயில்வே கிராசிங் அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
பட்டுக்கோட்டையில் சாலை மறியல்

பட்டுக்கோட்டை நகராட்சியில் கொண்டப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் இருந்து அண்ணா குடியிருப்பு பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியில் ரயில்வே கிராசிங் அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்து, அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து ஊா்வலமாகச் சென்று பேருந்து நிலைய நுழைவாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், பேருந்து நிலையத்திலிருந்து எந்த பேருந்தும் வெளியேற முடியவில்லை. அதிகாரிகள் வர தாமதமானதால், மறியல் தொடா்ந்து ஒரு மணி நேரம் நீடித்தது. இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் பிரபாகரன், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com