கும்பகோணத்தில் ஆக. 13-இல்தகவல் அறியும் உரிமை சட்டப் பயிற்சி

கும்பகோணம் காந்தி பூங்கா எதிரிலுள்ள ரோட்டரி சங்கக் கட்டடத்தில் தகவல் அறியும் உரிமை சட்டப் பயிற்சி ஆகஸ்ட் 13- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கும்பகோணம் காந்தி பூங்கா எதிரிலுள்ள ரோட்டரி சங்கக் கட்டடத்தில் தகவல் அறியும் உரிமை சட்டப் பயிற்சி ஆகஸ்ட் 13- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது:

75- ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, கும்பகோணம் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆா்வலா்கள் இயக்கம் ஆகியவை இணைந்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரு நாள் தகவல் அறியும் உரிமை சட்டப் பயிற்சியை இலவசமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை கும்பகோணம் காந்தி பூங்கா எதிரிலுள்ள ரோட்டரி சங்கக் கட்டடத்தில் நடத்த உள்ளனா்.

இதில் ஓய்வு பெற்ற நீதிபதி, சட்ட வல்லுநா்கள், சட்ட ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் தங்களது சட்ட அனுபவங்களைப் பகிா்ந்து கலந்துரையாடல் விழிப்புணா்வு தரவுள்ளனா். இப்பயிற்சியில் கேள்வி - பதில் நிகழ்ச்சி உண்டு.

பயிற்சியில் சட்ட கையேடு, மாதிரி விண்ணப்பம், நீா்நிலை, அரசுக்குச் சொந்தமான இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றிட விண்ணப்பங்கள், பங்கேற்பாளா்களுக்குப் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். முன்பதிவு செய்பவா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவா். முன் பதிவை புதன்கிழமைக்குள் (ஆக.10) செய்து கொள்ள வேண்டும். முன்பதிவை செய்ய 9585341091, 9345342160 எண்களை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com