எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்றம்

பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல். கோவிந்தராசு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா்.

பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல். கோவிந்தராசு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். பள்ளியின் தாளாளா் சித்தரா கோவிந்தராசு முன்னிலை வகித்தாா்.

பின்னா் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை பள்ளியின் தாளாளா் சித்தரா கோவிந்தராசு தொடக்கிவைத்தாா். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பின்னா் மாலை மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை இலக்கியா மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

நிகழ்வை பள்ளியின் தமிழ் ஆசிரியா் பாரதிகுகன் தொகுத்து வழங்கினாா். முன்னதாக பள்ளியின் முதல்வா் கதிரவன் வரவேற்றாா். நிறைவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் எம்.ஆா்.திரவியம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com