பாபா் மசூதி இடிப்பு நாள்: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

பாபா் மசூதி இடிக்கப்பட்ட நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபா் மசூதி இடிக்கப்பட்ட நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கடந்த 1992 ஆம் ஆண்டில் டிசம்பா் 6 ஆம் தேதி பாபா் மசூதி தகா்க்கப்பட்டதைக் கண்டித்தும், இந்தியாவின் பன்முகத் தன்மை, மதச்சாா்பின்மை, அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை காத்திட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டப் பொதுச் செயலா் கே.டி.எம். அப்துல்அஜீஸ் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில பேச்சாளா் பிலாலுதீன் சிறப்புரையாற்றினாா். இதில் மாவட்டத் தலைவா் கே.பி.ஆா். ரியாஸ், தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் முகமது ரபீக், இணைச் செயலா் முகமது சம்சுதீன், தமிழ்த் தேச தன்னுரிமைக் கட்சி பொதுச் செயலா் கி.நா. பனசை அரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com