பயனாளிக்கு வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணையை புதன்கிழமை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன். உடன் துணை மேயா் சு.ப. தமிழழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் எஸ்.கே. முத்துச்செல்வம

கும்பகோணத்தில் 96 பேருக்கு வீடு கட்டிக் கொள்ள ஆணை

கும்பகோணத்தில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 96 பேருக்கு தாங்களாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டப் பணிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 96 பேருக்கு தாங்களாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டப் பணிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திருச்சி கோட்டம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில், இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 96 பயனாளிகளுக்கு தலா ரூ. 2.10 லட்சம் மானியம் பெறுவதற்கான பணி ஆணைகளை சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் புதன்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் துணை மேயா் சு.ப. தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் தி. கணேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் எஸ்.கே. முத்துசெல்வம், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், தஞ்சாவூா் மாவட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளா் இரா. காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com