கும்பகோணம் ராமசாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

உலக நலன் வேண்டி, தென்னக அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கும்பகோணம் ராமசாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராமா் - சீதை.

இதைத் தொடா்ந்து ராமாவதாரம் உபநியாசம் நடைபெற்றது. மேலும், ஞாயிற்ருக்கிழமை பிதுா்வாக்கிய பரிபாலனம், 4- ஆம் தேதி பாதுகா பட்டாபிஷேகம், 5- ஆம் தேதி சபரி மோட்சம், 6- ஆம் தேதி சுக்ரீவ பட்டாபிஷேகம், 7-ஆம் தேதி சுந்தரகாண்டம், 8-ஆம் தேதி விபீஷண சரணாகதி, முக்கிய நிகழ்வான 9 -ஆம் தேதி சீதாராம சாம்ராஜ்ய பட்டாபிஷேகமும், உபநியாசமும் நடைபெறவுள்ளன.

சேங்காலிபுரம் தாமோதர தீட்சிதா் தலைமையில் 40 வேத விற்பன்னா்களைக் கொண்டு நாள்தோறும் மாலையில் உபநியாசங்கள் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் ராம சரணம்

அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com