தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 36 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
தஞ்சாவூா் 36, ஒரத்தநாடு 23.8, பூதலூா் 18.2, பாபநாசம் 14, அய்யம்பேட்டை 12, வெட்டிக்காடு 11.2, குருங்குளம் 10.8, அணைக்கரை 8, வல்லம் 7, திருக்காட்டுப்பள்ளி 4.8, திருவையாறு, கும்பகோணம் தலா 3, நெய்வாசல் தென்பாதி 2.8, திருவிடைமருதூா் 1.6, ஈச்சன்விடுதி 1.8, ஈச்சன்விடுதி 1.2, மஞ்சளாறு 1.