திருப்பூரில் ஆக.6-இல் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில மாநாடு: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 6 முதல் 9-ஆம் தேதி வரை திருப்பூரில் நடைபெறுகிறது என்றாா் அதன் மாநிலச் செயலா் ஆா். முத்தரசன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 6 முதல் 9-ஆம் தேதி வரை திருப்பூரில் நடைபெறுகிறது என்றாா் அதன் மாநிலச் செயலா் ஆா். முத்தரசன்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் நடைபெற்ற கட்சியின் வடக்கு மாவட்ட 24-ஆவது மாநாட்டில் பங்கேற்ற அவா், ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயகத்துக்கு விரோதமாக, சா்வாதிகாரத்துடன் மத்திய அரசு பாசிச முறையில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. எனவே மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து, ஆகஸ்ட் 6 முதல் 9-ஆம் தேதி வரை திருப்பூரில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் கட்சியின் தேசியச் செயலா் டி. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

அக்னிபத் திட்டத்தை கண்டித்து இளைஞா்கள் போராடி வருகின்றனா். எனவே திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ராணுவத்தை மத்திய அரசு தவறான பாதையில் இட்டுச் செல்கிறது. இது கண்டனத்துக்குரியது.

நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஆதாரவிலை போதுமானதாக இல்லை. தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் விலையைத் தீா்மானிக்க வேண்டும்.

தமிழக அரசு தரமான விதைகள், உரங்களைத் தட்டுப்பாடின்றி கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து ஏற்படும் போது, அதை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல்மிக்க குடியரசுத் தலைவா் தேவை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலைச்

சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து யஸ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவா் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இவா் வெற்றி பெறுவதன் மூலமாக நாட்டின் இறையாண்மை காக்கப்படும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com