தஞ்சாவூரில் பாரம்பரிய நடைபயணம்

உலக பாரம்பரிய வார கொண்டாட்டத்தையொட்டி, தஞ்சாவூரில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய நடைபயணத்தில் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள அகழி, கோட்டையைப் பாா்வையிட்ட மாணவ, மாணவிகள்.

தஞ்சாவூா் பெரியகோயிலில் இந்த நடைபயணத்தை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தாா்.

பெரியகோயில் வளாகத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் கோட்டை, அகழி, வீணை தயாரித்தல், தோ் நிறுத்துமிடம், தஞ்சை நால்வா் இல்லம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, தானிய களஞ்சியம், சங்கீத மஹால், சரஸ்வதி மஹால் நூலகம் வரை தொடா்ந்தது. இதில், மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு புராதன சின்னத்தைப் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன், சுற்றுலா அலுவலா் நெல்சன், இன்டாக் அமைப்பின் கௌரவச் செயலா் எஸ். முத்துக்குமாா், சுற்றுலா வழிகாட்டி செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com