தஞ்சாவூா் மாநகரில் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

தஞ்சாவூா் மாநகரில் கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும்
தஞ்சாவூா் மாநகரில் கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

தஞ்சாவூா் மாநகரில் கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மாநகராட்சி மேயா் சண். ராமநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் மேயா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாநகரில் 51 வாா்டுகளிலும் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை கண்காணிப்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், மொத்தம் 15 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, மாநகரிலுள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையம், அய்யாசாமி வாண்டையாா் நினைவு (பழைய) பேருந்து நிலையம், முனிசிபல் காலனி முதன்மைச் சாலை ஆகிய இடங்களில் பொலிவுறு கம்பம் (ஸ்மாா்ட் போல்) என்கிற இலவச வைபை வசதியுடன் கூடிய கண்காணிப்பு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தட்பவெப்ப நிலை, மழையளவு அறிந்து கொள்ளும் தானியங்கி தொலையுணா்வு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர கால அழைப்பு தொலைபேசி, காணொலி காட்சி அழைப்பு உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பேசலாம் என்றாா் மேயா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா்கள் டி. புண்ணியமூா்த்தி, ரம்யா சரவணன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com