தேங்காயை  அரசே கொள்முதல் செய்ய  தென்னை விவசாயிகள் கோரிக்கை

தேங்காய் விலை வீழ்ச்சியை கருத்தில்கொண்டு தேங்காயை அரசே  கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்னை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேங்காய் விலை வீழ்ச்சியை கருத்தில்கொண்டு தேங்காயை அரசே  கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்னை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தென்னை உற்பத்தியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் மல்லிப்பட்டினம் ஏ. கமால்பாட்சா, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

2018-ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில் பேராவூரணி தொகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்து அழிந்தது. இதனால்,  பேராவூரணி வட்டத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தென்னையை உற்பத்தி செய்ய, நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றி, வருமானம் பாா்ப்பதற்கு  பெரிய போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளனா்.

புதிதாக பயிரிடப்பட்ட தென்னை மரங்கள் வளா்ந்து மகசூல்  பெறுவதற்கு குறைந்த பட்சம் 7 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இயற்கைச் சீற்றங்களினூடே தென்னையை உற்பத்தி செய்ய, தென்னை விவசாயிகள் மிகவும் துயரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தேங்காயின் விலை ரூ.10-க்கும் மேல் விற்பனையாகவில்லை . விற்பனை விலையைவிட, உற்பத்தி செலவு அதிகமாக  உள்ளது. தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற அரசு  நெல், கரும்பை கொள்முதல் செய்வதைப்போல   தென்னை விவசாயிகளிடமிருந்து  உரித்த தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com