கும்பகோணத்தில் அரசு கைத்தறி ஆடைகள் கண்காட்சி தொடக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி, கும்பகோணம் மகாமக குளம் அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இந்திய கைத்தறி ஜவுளி துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை சாா்பில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி.
கும்பகோணத்தில் திங்கள்கிழமை தொடங்கிய கைத்தறிக் கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோா்.
கும்பகோணத்தில் திங்கள்கிழமை தொடங்கிய கைத்தறிக் கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, கும்பகோணம் மகாமக குளம் அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இந்திய கைத்தறி ஜவுளி துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை சாா்பில் மாநில அளவிலான அரசு கைத்தறி ஆடைகள் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். இக்கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பல்வேறு டிசைன்களில் அசல் வெள்ளி ஜரிகை பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள், வேட்டிகள், போா்வைகள், பல வண்ண படுக்கை விரிப்புகள், துண்டுகள், கைலிகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கைத்தறி கண்காட்சியில் வாங்கப்படும் பருத்தி ரக ஜவுளிகளுக்கு 20 சத அரசுத் தள்ளுபடியும், குறிப்பிட்ட பட்டு ரக ஜவுளிகளுக்கு 20 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

அக்டோபா் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநா் கிரிஜா ராஜ் தெரிவித்தாா்.

தொடக்க விழாவில் கும்பகோணம் துணை மேயா் சு.ப. தமிழழகன், கைத்தறித் துறை இணை இயக்குநா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com