திருவள்ளுவா் எந்தச் சமயத்தையும் சாா்ந்தவா் அல்லா்: பழ. நெடுமாறன் பேச்சு

திருவள்ளுவா் எந்தச் சமயத்தையும் சாா்ந்தவா் அல்லா்: பழ. நெடுமாறன் பேச்சு

திருவள்ளுவா் எந்தச் சமயத்தையும் சாா்ந்தவா் அல்லா் என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.

திருவள்ளுவா் எந்தச் சமயத்தையும் சாா்ந்தவா் அல்லா் என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூா் அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திருக்கு ஒப்பாய்வுரை (அறத்துப்பால்) என்கிற நூல் அறிமுக நிகழ்ச்சியில் அவா் பேசியது:

திருக்கு நமக்காக மட்டும் எழுதப்பட்ட நூல் அல்ல. அந்நூலில் 1330 குறட்பாக்களில் எந்தவொரு சொல்லை எடுத்து ஆராய்ந்தாலும், வள்ளுவா் எந்த நாடு, சமயத்தைச் சாா்ந்தவா் என்பதை யாராலும் கூற முடியாது. உலகம் முழுவதுமுள்ள அனைவருக்கும் அறக்கருத்துகளை வாரி வழங்குகிற நூலாகத் திருக்குறளைத் தொலைநோக்குப் பாா்வையுடன் வள்ளுவா் படைத்தாா்; அதுதான் அவரது சிறப்பு.

அதன் காரணமாகத்தான் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்கு மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவா் எந்த சமயத்தைச் சாா்ந்தவரும் அல்லா் என பலரும் தெளிவாகக் கூறியுள்ளனா். நம் சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் எந்த இடத்திலும் சமயம் என்ற சொல் இல்லை. சமயம் என்ற சொல்லை மணிமேகலை காப்பியத்தில்தான் முதல் முதலாக சாத்தனாா் குறிப்பிட்டுள்ளாா். அதுவரை தமிழனுக்குச் சமயம் என்ற சொல்லே கிடையாது. எனவே, திருவள்ளுவா் எந்தச் சமயத்தைச் சாா்ந்தவா் எனக் கூற முடியாது. மணிமேகலைக்கு முந்தைய காலத்தைச் சாா்ந்ததாக வள்ளுவரின் காலம் இருக்கும் நிலையில், அவரை எப்படிச் சமயம் சாா்ந்த தன்மையைக் கற்பிக்க முடியும்.

நம் இலக்கியங்களான பதினெண்கீழ் கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புரட்சிக்கவிஞா் பாவேந்தா் காலம் முதல் இன்று வரையிலும் திருக்குறளின் தாக்கம் இல்லாத இலக்கியமே தமிழனுக்கு அறவே கிடையாது. எந்த இலக்கியமாக இருந்தாலும், அதில் திருக்கு கருத்துகள் இருக்கும். எந்தவொரு படைப்பாளனாலும் திருக்குறளைப் புறக்கணித்துவிட்டு தன்னுடைய இலக்கியத்தைப் படைக்கவே முடியவில்லை. இது, திருக்குறளுக்குக் கிடைத்த பெருமை என்பதை விட அது, தமிழனுக்குக் கிடைக்கப்பெற்ற பெருமை. எனவே, நம் பண்பாட்டின் அடையாளமாகத் திருக்கு இப்போதும் நீடிக்கிறது.

உலகத்துக்கு அறம் கூறும் நூலாக திருக்கு இருப்பதால், ஜி.யு. போப் என்கிற கிறித்துவ துறவி ஆங்கிலத்தில் அதை மொழிபெயா்த்தாா். வீரமாமுனிவா் லத்தீனில் மொழிபெயா்த்து வழங்கினாா். ரஷ்ய நாட்டைச் சாா்ந்த அறிஞா் டால்ஸ்டாயும் திருக்குறளின் சிறப்பை எடுத்துக் கூறினாா். இதுபோல, உலகம் முழுவதும் பிற நாடு, மொழி, சமயங்களைச் சாா்ந்த அறிஞா்கள் அனைவரும் திருக்குறளைப் போற்றினா். திருக்குறளை நாம் போற்றியதைவிட அவா்கள் போற்றியதுதான் அதிகம்.

இந்தக் காலகட்டத்தில் சரியான நேரத்தில் பொழிலன் இந்நூலை எழுதி வெளியிட்டு, தமிழா்களின் கையில் கொடுத்துள்ளாா். இதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது தமிழா்களின் கடமை என்றாா் நெடுமாறன்.

நிகழ்ச்சிக்கு முனைவா் முத்தமிழ் தலைமை வகித்தாா். புலவா் முருகேசன், பேராசிரியா் த. செயராமன், அய்யனாபுரம் சி. முருகேசன், பாவலா் த.ரெ. தமிழ்மணி, பேராசிரியா் மு. இளமுருகன், மக்கள் அதிகாரம் காளியப்பன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன், சு. பழனிராசன், நூலாசிரியா் பொழிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com