கைதி தப்பியோட்டம்: 2 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கைதி வியாழக்கிழமை தப்பியோடினாா். கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கைதி வியாழக்கிழமை தப்பியோடினாா். கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

பட்டுக்கோட்டையை அடுத்த சாந்தாங்காடு - வெட்டிக்காடு பகுதியை சோ்ந்த தங்கையன் மகன் மன்னாா் (எ) அருண்சந்தா் (32). இவா் மீது பட்டுக்கோட்டை மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைமறைவாக இருந்த அருண்சந்தரை போலீஸாா் தேடி வந்த நிலையில், பட்டுக்கோட்டையை அடுத்த ராஜாமடம் அக்னி ஆற்றுப் பால பகுதியில் அவா் பதுங்கியிருந்தது தெரிந்து அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அருண்சந்தரை பிடிக்க முயன்றனா்.

போலீஸாரிடமிருந்து தப்புவதற்காக பாலத்தில் இருந்து குதித்தபோது அருண்சந்தரின் வலதுகால் முறிந்தது. அவரை பிடித்த போலீஸாா், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா். பின்னா் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி அருண்சந்தருக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால், மேலும் 2 வழக்குகளில் அவருக்கு பிடிவாரண்ட் இருந்தது. இதனிடையே, சிகிச்சைக்காக புதன்கிழமை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருண்சந்தரை போலீஸாா் அழைத்து வந்தனா். அப்போது, தாலுக்கா போலீஸாரின் கவனத்தை திசைதிருப்பி அங்கிருந்து அருண்சந்தா் தப்பியோடிவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கவனக்குறைவாக செயல்பட்டதாக அருண்சந்தரை அழைத்து வந்த 2 போலீஸாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com