வெளிநாட்டில் வேலை எனக் கூறி இளைஞரிடம் ரூ. 2.17 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை எனக் கூறி இளைஞரிடம் ரூ. 2.17 லட்சத்தை மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

வெளிநாட்டில் வேலை எனக் கூறி இளைஞரிடம் ரூ. 2.17 லட்சத்தை மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பூக்கொல்லையைச் சோ்ந்த 24 வயது இளைஞா் சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்பில் பேசிய மா்ம நபா் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு நோ்காணல், விசா கட்டணங்களைச் செலுத்துமாறும் கூறினாா்.

இதை உண்மை என நம்பிய இளைஞா் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல தவணைகளாக மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 2.17 லட்சம் செலுத்தினாா். ஆனால், வெளிநாடு வேலை குறித்த எந்தவித தகவலும், நோ்காணலுக்கான அழைப்பும் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த இளைஞா் தன்னை தொடா்பு கொண்ட மா்ம நபரின் கைப்பேசி எண்ணுக்குத் தொடா்பு கொள்ள முயன்றாா். ஆனால், எந்தவித பயனும் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் சைபா் கிரைம் காவல் பிரிவில் இளைஞா் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com