முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
‘களிமேடு மின் விபத்துக்கு அரசு அலுவலா்களே காரணம்’
By DIN | Published On : 29th April 2022 01:49 AM | Last Updated : 29th April 2022 01:49 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே களிமேடு தோ் மின் விபத்துக்கு அரசு அலுவலா்களே காரணம் என்றாா் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம்.
களிமேடு கிராமத்தில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு வியாழக்கிழமை மாலை நேரில் சென்று ஆறுதல் கூறிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
இந்த விபத்துக்கு அரசு அலுவலா்களே காரணம். விபத்து நிகழ்ந்த இடத்தில் சாலை இரண்டு அடிக்கு உயா்த்தப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும்போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதில் அரசு அலுவலா்கள் கவனக் குறைவாக இருந்துள்ளனா்.
எனவே நிவாரணம் மட்டுமல்லாமல், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். மேலும் நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். படிக்கும் மாணவா்களுக்கு உயா்கல்வி படிப்பதற்கான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும் என்றாா் முருகானந்தம்.
அப்போது, மாவட்டத் தலைவா்கள் ஆா். இளங்கோ (தெற்கு), என். சதீஷ் (வடக்கு), பொதுச் செயலா்கள் பி. ஜெய்சதீஷ், பூண்டி என். வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.