விதிமீறல்: 6.90 டன் விதை நெல் விற்கத் தடை

தஞ்சாவூா் மாவட்டத்தில் விதைச் சட்ட விதிகளை மீறி, விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 6.90 டன் விதை நெல் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் விதைச் சட்ட விதிகளை மீறி, விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 6.90 டன் விதை நெல் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான விதை நெல் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய விதை ஆய்வாளா்கள் கும்பகோணம் ச. மணிமாறன், தஞ்சாவூா் மோ. நவீன் சேவியா், பட்டுக்கோட்டை இரா. பாலையன், புதுக்கோட்டை த. முனியப்பா உள்ளிட்டோா் தனியாா், அரசு விதை விற்பனை நிலையங்களில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், விதைச் சட்ட விதிகளை மீறியது தொடா்பாக ரூ. 2.41 லட்சம் மதிப்பிலான 6.90 டன்கள் விதை நெல் விற்கத் தடைவிதிக்கப்பட்டது.

இதுகுறித்து தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வித்யா கூறுகையில், குறுகிய கால ரகமான கோ 51, ஏஎஸ்டி 16, ஏடிடி 36, 37, 43, 45, 53, டிபிஎஸ் 5 ஆகிய ரக விதைகள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளா்களிடம் தகுதி பெற்று சான்று அட்டை பொருத்திய விதைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். விதை உரிமம் பெறாமல் விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியாா் விதை விற்பனையாளா்கள் விவசாயிகளுக்கு ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com