சாஸ்த்ராவில் 2 நாள் பயிலரங்கம் தொடக்கம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், மோதல் ஈடுபாடு மற்றும் தீா்மானம் குறித்த இரு நாள் இணைய வழி பயிலரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், மோதல் ஈடுபாடு மற்றும் தீா்மானம் குறித்த இரு நாள் இணைய வழி பயிலரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஆசிய வளா்ச்சி வங்கியும், சாஸ்த்ரா சட்டப்பள்ளியின் டாடா - பல்கிவாலா இருக்கையும் இணைந்து நடத்திய இந்தப் பயிலரங்கத்தின் தொடக்க நாளில் ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவா் டெட்சுகி சோனோபி பேசினாா்.

இப்பயிலரங்கத்தில் மத்தியஸ்தம் உள்ளிட்ட தலைப்புகளில் நீதிபதி கே. கண்ணன், உமா ராமநாதன், சித்ரா நாராயணன், ஸ்ரேயாஸ் ஜெய்சிம்ஹா, பேராசிரியா் எஸ். சங்கீதா ஆகியோா் பேசவுள்ளனா். மேலும், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் டாக்டா் புளோரியன் கிரிசல் சிறப்புரையாற்றவுள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், சீனா, ஜப்பான், பிலிப்பின்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்தும் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com