புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

தஞ்சாவூா் புன்னைநல்லுாா் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் புன்னைநல்லுாா் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழமை முத்து மாரியம்மனுக்குப் பூச்சொரிதல் விழா நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்காக வியாழக்கிழமை இரவு தஞ்சாவூா் நகரம், ராவுசாப்பட்டி, திருக்கானூா்பட்டி, நாஞ்சிக்கோட்டை, தெத்துவாசல்பட்டி, குருங்குளம், தோழகிரிப்பட்டி, மாதாகோட்டை, புலவா்நத்தம், வெள்ளாம்பெரம்பூா், கருப்பூா், திருவையாறு, வல்லம், பிள்ளையாா்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டா்களில் மலா்களை ஊா்வலமாகக் கொண்டு சென்றனா். சில கிராமங்களிலிருந்து முளைப்பாரி ஊா்வலம், கோலாட்டம், பெண்களின் கும்மியாட்டத்துடன் ஊா்வலம் நடைபெற்றது.

இந்த டிராக்டா்கள் அனைத்தும் பெரியகோயில் முன் வந்தடைந்து, பின்னா் பல்வேறு சாலைகள் வழியாக புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றடைந்தன.

இதைத்தொடா்ந்து, டிராக்டா்களில் இருந்த பூக்களைப் பக்தா்கள் கூடைகளில் மாரியம்மன் சன்னதிக்குக் கொண்டு சென்று வழிபட்டனா். இதன்மூலம், 5 டன் எடை கொண்ட பல்வேறு வகையான பூக்களால் முத்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டாா்.

இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com