கோவிந்தபுரத்தில் கோலாஷ்டமி விழா

கும்பகோணம் அருகே தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் கோகுலாஷ்டமி விழா, கிருஷ்ண ஜனனம், உறியடி ஆகியவை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன.

கும்பகோணம் அருகே தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் கோகுலாஷ்டமி விழா, கிருஷ்ண ஜனனம், உறியடி ஆகியவை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன.

இக்கோயிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆக. 13 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து ராஜகோபாலசாமி அலங்காரத்தில் வன போஜனம் நிகழ்ச்சி, கருட வாகனப் புறப்பாடு, குதிரை வாகனத்தில் புறப்பாடு, சிறப்பு மேள தாளம் முழங்க கோயில் ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 12 மணி வரை சிறப்பு நாம சங்கீா்த்தன நிகழ்ச்சியும், தொடா்ந்து கிருஷ்ண ஜனனம் நிகழ்ச்சியில் சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருள சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.

கோயில் மூலவா் சன்னதியில் மலா்களால் அலங்காரமும், மகா தீப ஆராதனையும் செய்யப்பட்டன. பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் திவ்ய நாம சங்கீா்த்தனம் மற்றும் சேங்காலிபுரம் ராம தீட்சதா் சிறப்பு உபன்யாசம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

தொடா்ந்து, சனிக்கிழமை காலை சிறப்பு பஜனையுடன் வெண்ணெய்த்தாழி உற்சவம், புறப்பாடு நடைபெற்றது. கோயில் வளாகம், கோசாலை பகுதிகளில் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த 30-க்கும் அதிகமான உறியடிப் பானைகளை கோலாட்டம் ஆடியபடியே பக்தா்கள் உடைத்து மகிழ்ந்தனா். இரவு புஷ்ப பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) காலை கோயிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com