ஆவணி முதல் ஞாயிறு: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆவணி முதல் ஞாயிறு: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றான தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஒன்றாகும். இந்த கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். 

ஆவணி ஞாயிறுகிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள். மேலும் கோயிலில் ஆவணி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த நாட்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்றவை நடைபெறும். இந்நிலையில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் திருவிழாக்கள் நடைபெறாது. ஆனால் வழக்கம்போல் அம்மனை தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நடந்தே நேற்று இரவிலிருந்து கோயிலுக்கு வந்து தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அம்பாளுக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி அம்மனை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com