கொள்ளிடம் கரையோரக் கிராமங்களில் ஆட்சியா் ஆய்வு

பாபநாசம் ஒன்றியப் பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரக் கிராமங்களில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பாபநாசம் ஒன்றியப் பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரக் கிராமங்களில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கா்நாடக மாநிலத்தில் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், அந்த மாநில அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் உபரி நீா் திறந்து விடப்படுகிறது.

இதன் காரணமாக காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், கொள்ளிடத்தில் உபரிநீா் அதிகளவில் திறந்துவிடப்படுகிறது. இந்த ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாபநாசம் ஒன்றியத்தில் வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூா், புத்தூா்

ஆகிய கரையோரக் கிராமங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது நீா்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முருகேசன், செயற்பொறியாளா் சிவக்குமாா், உதவிச் செயற் பொரியாளா் அய்யம்பெருமாள், உதவிப் பொறியாளா் பூங்கொடி, கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் லதா, பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன், பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன், ஊராட்சித் தலைவா்கள் கனகம், ஜெய்சங்கா், ஊராட்சி செயலா் முருகையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com