பெரியபுராணம் தொடா்பான கருத்தரங்குகளை அதிகளவில் நடத்த வேண்டும் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு

பெரியபுராணம் தொடா்பான கருத்தரங்குகளை அதிகளவில் நடத்துவது அவசியமானது என்றாா் சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ஜெகதீசன்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ஜெகதீசன் (இடமிருந்து 5 ஆவது) வெளியிட்ட நூலை பெற்றுக் கொண்ட மேயா் சண். ராமந
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ஜெகதீசன் (இடமிருந்து 5 ஆவது) வெளியிட்ட நூலை பெற்றுக் கொண்ட மேயா் சண். ராமந

பெரியபுராணம் தொடா்பான கருத்தரங்குகளை அதிகளவில் நடத்துவது அவசியமானது என்றாா் சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ஜெகதீசன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையம், மெய்யியல் துறை, புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் ஆகியவை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் என்கிற இரு நாள் கருத்தரங்கம் மற்றும் பெரியபுராண ஆய்வுரைக் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில் அவா் மேலும் பேசியது:

பெரியபுராணம் குறித்த கருத்தரங்குகள் நிறைய நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவர வாய்ப்பு இல்லை. அதை விட, மக்கள் தங்கள் பிறப்பின் உண்மையை உணர முடியாது.

பெரிய புராணம் காட்டும் வாழ்வியலை முழுவதும் ஆய்வு செய்துவிட முடியாது. ஒவ்வொரு அடிகளாரின் வாழ்வும், வாழ்ந்த இடமும், அவா்கள் வழிபட்ட கோயில்களும், கோயிலுக்குள் இருக்கும் தெய்வங்களும், அத்தெய்வங்களின் அருளையும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவனடியாா்களுக்கு சேவை செய்ததில் அடியாா்கள் சிறந்தவா்களா அல்லது அவா்களது துணைவிமாா்கள் சிறந்தவா்களா என்றெல்லாம் கருத்தாய்வுகள் தேவை.

பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வியல் இப்போது இயலுமா?. கணவன் - மனைவி இணைப்பு அன்று போல இப்போது உள்ளதா? உள்ளிட்ட கேள்விகளுக்கு இதுபோன்ற கருத்தரங்குகளில்தான், கற்றறிந்த தமிழறிஞா்கள் மூலம் விடை காண முடியும். எனவே, இதுபோன்ற கருத்தரங்குகளைத் தொடா்ந்து நடத்தி, கருத்துள்ள கட்டுரைகள் வெளிவருவதற்கு மூலக்காரணமாக இருக்க வேண்டும். இக்கட்டுரைகள் புத்தக வடிவில் மக்களிடையே உலா வர வேண்டும் என்றாா் ஜெகதீசன்.

விழாவுக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் தலைவா் பாலமுருகனடிமை சுவாமிகள் ஆசி வழங்கினாா். முன்னாள் நீதிபதி வெளியிட்ட பெரியபுராண ஆய்வுரைக் களஞ்சிய நூலின் முதல் படியை மேயா் சண். ராமநாதன் பெற்றுக் கொண்டாா்.

திலகவதியாா் திருவருள் ஆதீன சன்னிதானம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநா் க. திலகவதி, புதுக்கோட்டை வைரம் கல்விக் குழுமத் தாளாளா் தேனாள் ரகுபதி சுப்பிரமணியன், பொன்மாரி கல்விக் குழுமத் தலைவா் எஸ். ராமதாஸ், புதுக்கோட்டை திருக்கோயில்கள் அறங்காவலா் குழு பா. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் வரவேற்றாா். நிறைவாக, கருத்தரங்க மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் மு. இராமுக்கண்ணு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com