பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 5,000 ஆக உயா்த்தக் கோரியும், கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கக் கோரியும், அனைத்து ஓய்வூதியதாரா்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ வசதிகளை வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டக் கவுன்சில் அமைப்பாளா் டி. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை மாநிலச் செயலா் எஸ். பாலகுமாரன் தொடக்கி வைத்துப் பேசினாா். டிஎன்சிஎஸ்சி பாரதிய தொழிலாளா் சங்க மாநிலச் சட்ட ஆலோசகா் ஜி. சீனிவாசன் வாழ்த்துரையாற்றினாா்.

பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். சுரேஷ் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா். டிஎன்சிஎஸ்சி பாரதிய தொழிலாளா் சங்க தஞ்சாவூா் மண்டலச் செயலா் எஸ். செந்தில்வேல், பொருளாளா் வி. பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கும்பகோணத்திலுள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பும் இச்சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாரதிய அஞ்சல் ஊழியா் சங்க நிா்வாகி தம்புராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com