பட்டீஸ்வரம் பள்ளியில் சிறாா் திரைப்பட விழா அமைச்சா் தொடங்கிவைத்தாா்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சிறாா் திரைப்பட திருவிழாவைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.
பட்டீஸ்வரம் பள்ளியில் சிறாா் திரைப்பட விழா அமைச்சா் தொடங்கிவைத்தாா்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறாா் திரைப்பட திருவிழாவைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.

தொழில்முறை கலைஞா்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவா்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்துடன் பல்வேறு கலைச் செயல்பாடுகளைத் தமிழக பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாதந்தோறும் இரண்டாவது வாரத்தின் ஓா் நாளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான திரையிடல் திட்டத்தை சிறாா் திரைப்பட விழா என்ற பெயரில் வகுத்துள்ளது.

இதன்படி, பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறாா் திரைப்பட திருவிழாவைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசியது:

தஞ்சாவூா் மாவட்டத்துக்காக தஞ்சாவூா் திரைப்படம் மன்றம், பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சாா்லி சாப்ளின் திரைப்பட மன்றம், கும்பகோணம் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்யஜித் ரே திரைப்பட மன்றம், தாராசுரம் வை. கோவிந்தசாமி நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கே. பாலசந்தா் திரைப்பட மன்றம், திப்பிராஜபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பாலுமகேந்திரா திரைப்படம் மன்றம், உடையாளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மணிரத்னம் திரைப்படம் மன்றம் ஆகிய திரைப்பட மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இம்மன்றங்கள் மூலம் அந்தந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்குச் சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இது, மாணவ, மாணவிகளுக்கு நல்ல கருத்தையும், பண்பையும் எடுத்துரைக்கும் என்றாா் அமைச்சா்.

இவ்விழாவில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் ஆா். சுதன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன், தொடக்கக் கல்வி இயக்குநா் க. அறிவொளி, முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com