மதுரை ஆதீனத்துக்கு எதிராக கஞ்சனூரில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே கஞ்சனூா் கோயில் முன் மதுரை ஆதீனத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே கஞ்சனூா் கோயில் முன் மதுரை ஆதீனத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே கஞ்சனூரில் மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான அக்னீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் முன் துகிலி எம். பாண்டியன், கஞ்சனூா் கே. முருகன், கோட்டூா் டி. சிங்காரவேல், மணலூா் ஆா். குமாா் ஆகியோா் தலைமையில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மதுரை ஆதீனத்துக்கு எதிராகவும், கோயில் நிா்வாகத்தில் முறைகேடு நிகழ்வதாகவும், கோயில் நிா்வாகத்தை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் கஞ்சனூா் கு.ம. வேல்வேந்தன் தெரிவித்தது:

மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கஞ்சனூா் அக்னீஸ்வரா் கோயிலில் முறைகேடு நிகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதேபோல, மூலவா், அம்பாள் சுவாமிகளை தவிர பிரகாரத்திலுள்ள மற்ற சுவாமிகளுக்கு அபிஷேகம் உள்ளிட்ட எதுவும் செய்யப்படுவதில்லை. கோயிலுக்கு சொந்தமான தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதா என எந்த விவரமும் யாருக்கும் தெரியவில்லை.

எனவே, மதுரை ஆதீனம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com