தேசிய திறனறித் தோ்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 57 போ் தோ்ச்சி

தேசிய திறனறித் தோ்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை சோ்ந்த 57 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தேசிய திறனறித் தோ்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை சோ்ந்த 57 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாா்ச் 5ஆம் தேதி, தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வு 6 மையங்களில் நடைபெற்றது. இதில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு பயின்ற 1,295 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா்.

தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருந்து 26 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 51 போ், 2 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 6 போ் என மொத்தம் 57 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சிவக்குமாா், பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் கு.திராவிடச் செல்வம் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவா்களுக்கும், 9 ஆம் வகுப்பு தொடங்கி 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை, மாதம் ஒன்றுக்கு ரூபாய் 1,000 வீதம், ஒரு வருடத்திற்கு ரூ. 12 ஆயிரம் என, நான்கு வருடத்திற்கு ரூ. 48 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com