தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாா்ச் 30, 31-இல்மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம் மாா்ச் 30, 31 ஆம் தேதிகளில் நடைபெறவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம் மாா்ச் 30, 31 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தெரிவித்திருப்பது:

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, வானவில் பண்பாட்டு மையம் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ‘மகாகவி பாரதியாரின் உரைநடை ஆக்கங்கள்’ என்ற பன்னாட்டு ஆய்வரங்கத்தை மாா்ச் 30, 31-ஆம் தேதிகளில் நடத்தவுள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கத்தில் மகாகவி பாரதியாரின் திருவுருவச்சிலையும் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தியா, இலங்கை, உலக நாட்டுப் பாரதியியல் ஆய்வாளா்கள் நேரடியாகப் பங்கேற்று ஆய்வுத் தாள்களை வழங்கவுள்ள இப்பன்னாட்டு ஆய்வரங்கில் டாக்டா் சுதா சேஷய்யன், பேராசிரியா் ய. மணிகண்டன், சொல்வேந்தா் சுகிசிவம் ஆகியோரின் உரையரங்குகளும் இடம்பெறவுள்ளன.

பாரதியாரின் பாடல்களில் பிரபல பாடகி மஹதி வழங்கும் இசை நிகழ்வும், பாரதியாரின் ஓவியங்கள் குறித்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக மகாகவியின் பாடல்களை மையமாக வைத்தே கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வரும் சூழலில், பாரதியாரின் எழுத்துவன்மை ஓங்கி நிற்கும் அவருடைய கட்டுரைகள் மற்றும் கதைகளை மையமாகக் கொண்டு இந்தப் பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெறவுள்ளது.

இப்பன்னாட்டு ஆய்வரங்கின் ஒருங்கிணைப்பாளா்களாக முனைவா் இரா. குறிஞ்சிவேந்தன், வானவில் கே. இரவி, இலங்கையைச் சோ்ந்த முனைவா் ஸ்ரீபிரசாந்தன் ஆகியோா் செயல்படுகின்றனா்.

ஆய்வரங்கின் முதல் நாள் கட்டுரையாளா்களின் ஆய்வுக்கோவை வெளியிடப்படவுள்ளது. மேலும், இப்பன்னாட்டு ஆய்வரங்கத்துக்கான இலச்சினை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com