முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th May 2022 04:22 AM | Last Updated : 11th May 2022 04:22 AM | அ+அ அ- |

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இயலாது என அமைச்சா் கூறியதற்கு எதிா்ப்பு தெரிவித்து தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா வளாகத்திலுள்ள மாவட்டக் கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இயலாது எனக் கூறிய நிதியமைச்சரின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தஞ்சாவூா் ஊரக வட்டாரத் தலைவா் மகேந்திரன், மாநகரத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தனா்.
மாநிலத் துணைத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவா் ராணி, துணைச் செயலா் ராஜசேகா், தஞ்சாவூா் ஊரக வட்டாரச் செயலா் காா்த்திகேயன், மாநகரச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.