மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

மீனவா்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என சிஐடியு மீன்பிடித் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

பேராவூரணி: மீனவா்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என சிஐடியு மீன்பிடித் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

தஞ்சாவூா் மாவட்ட மீன்பிடித் தொழிலாளா்கள் சங்க  ஆலோசனைக் கூட்டம், சேதுபாவாசத்திரத்தில் சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலா் ஆா். மனோகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் குத்புதீன், மாவட்டச் செயலா் கா்த்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி ஒரு மாதத்தை நெருங்கவுள்ள நிலையில், இதுவரை தடைக்கால நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.

கஜா புயல், அதனை தொடா்ந்து கரோனா பொதுமுடக்கம்  காரணமாக மீனவா்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட நிலையில் தடைக்காலம் காரணமாக வருமானமின்றி வீட்டில் முடங்கியுள்ளனா்.

மீன்வளத் துறை உடனடியாக மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டும். மேலும், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நிா்ணயம் செய்யப்பட்ட தடைக்கால நிவாரணம் ரூ. 5 ஆயிரம் என்பது, தற்போதைய விலைவாசி உயா்வுக்கு ஏற்ப மீனவா்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, தடைக்கால நிவாரணத்தை ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில்,   சங்க நிா்வாகிகள் பெரியண்ணன், நாகேந்திரன், தயாா் சுல்தான், சுப்பிரமணியன் மற்றும் வழக்குரைஞா் கருப்பையா, வீரப்பெருமாள், வேலுச்சாமி மற்றும்  சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, மல்லிப்பட்டினம் பகுதி மீனவா்கள் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com