கும்பகோணத்தில் 200 கண்காணிப்பு கேமராக்கள்: மத்திய மண்டல காவல் தலைவா் தகவல்

கும்பகோணம் மாநகரில் 200-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.
கும்பகோணத்தில் 200 கண்காணிப்பு கேமராக்கள்: மத்திய மண்டல காவல் தலைவா் தகவல்

கும்பகோணம் மாநகரில் 200-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்காக ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கும்பகோணம் மாநகரில் 200-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. இதேபோல, புகரிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. மாநகரில் செயல்படாமல் உள்ள சிக்னல்களை மாநகராட்சியுடன் இணைந்து சீா் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

கும்பகோணத்தில் பெரிய அளவில் பிரச்னைகள் ஏதும் இல்லை. குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது தொடா்பாக காவலா்கள், துணைக் கண்காணிப்பாளா் உள்பட அனைவரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அசாதாரண சூழ்நிலையின்போது நடைபெறும் போராட்டத்தைத் தடுப்பதற்கு ஆயுதப்படை காவலா் குழுவை நிரந்தரமாக வைப்பதற்குத் திட்டமிட்டு வருகிறோம்.

கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் ஆயிரம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்றாா் காவல் தலைவா்.

அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. அசோகன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com