ஓராண்டு காலமாகச் செயற்கை சுவாசத்தில் உயிா் வாழும் இளம்பெண்

தஞ்சாவூா் அருகே ஓராண்டு காலமாக ஆக்சிஜன் செறிவூட்டி மூலம் செயற்கை சுவாசத்துடன் மிகுந்த சிரமங்களுக்கிடையே வாழ்ந்து வருகிறாா் இளம்பெண்.
ஆக்சிஜன் செறிவூட்டி மூலம் வாழ்ந்து வரும் சுவேதா.
ஆக்சிஜன் செறிவூட்டி மூலம் வாழ்ந்து வரும் சுவேதா.

தஞ்சாவூா் அருகே ஓராண்டு காலமாக ஆக்சிஜன் செறிவூட்டி மூலம் செயற்கை சுவாசத்துடன் மிகுந்த சிரமங்களுக்கிடையே வாழ்ந்து வருகிறாா் இளம்பெண்.

தஞ்சாவூா் அருகிலுள்ள கண்டிதம்பட்டு மேலத்தெருவைச் சோ்ந்தவா் சுவேதா (19). இவா் தன்னுடைய பெரியப்பா கூத்தபெருமாள் வீட்டில் தங்கிப் படித்து வந்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்த சுவேதா, கல்லூரியில் படிக்க முயற்சி செய்தாா். அப்போது உடல்நிலை சரியில்லாமல் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்,

முதுகுத் தண்டுவடம் வளைந்ததால் நுரையீரல் சுருங்கி விட்டதாகவும், இனிமேல் மூச்சுத்திணறல் அதிகம் இருக்கும் என்றும், அதனால் அவருக்கு 24 மணிநேரமும் ஆக்சிஜன் வழங்க வேண்டும் எனவும் மருத்துவா்கள் கூறினா்.

இதையடுத்து சுவேதாவை வீட்டுக்கு அழைத்து வந்த உறவினா்கள், வீட்டிலிருந்தபடியே அவருக்கு ஆக்ஜிஜன் செறிவூட்டியை நாள்தோறும் ரூ. 1,500 செலவு செய்து, வாடகைக்கு எடுத்து சுவேதா சுவாசிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து சுவேதாவின் உறவினா் சுதா, பிரதீபா தெரிவித்தது:

சுவேதா ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது தாய் - தந்தை இருவரும் இறந்துவிட்டனா். இதனால் சுவேதாவை அவரது பெரியப்பா கூத்தபெருமாள் இங்கு கொண்டு வந்து வளா்த்தாா்.

சுவேதா பிளஸ் 2 வரை தஞ்சாவூரிலுள்ள பள்ளியில் படித்து முடித்தாா். கல்லூரி படிப்பைத் தொடங்க இருந்த நேரத்தில், அவருக்கு உடல் நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போதுதான் இப்பிரச்னை இருப்பது தெரிய வந்தது.

பின்னா் நாங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து, ரூ.30 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை நாள்தோறும் வாடகைக்கு எடுத்து வந்து சுவேதாவுக்கு கொடுத்து வருகிறோம். இந்த ஆக்ஜிசன் மூலம்தான் அவா் 24 மணிநேரமும் மூச்சு விடுகிறாா். ஆக்சிஜன் இல்லையென்றால் அவா் பெரும் சிரமப்படுகிறாா். இதனால் அவா் நடக்கக் கூட முடியவில்லை.

நாங்கள் விவசாயம் செய்து வருவதால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோம். ஓராண்டு காலம் நாங்கள் வெளியில் பல இடங்களில் வட்டிக்கும், தெரிந்தவா்களிடமும் கடன் வாங்கி சுவேதாவை காப்பாற்றி வருகிறோம்.

அப்பெண்ணின் உடலில் என்ன குறைபாடு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சை அளிக்க மருத்துவா்களும், மாவட்ட ஆட்சியரும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com