கூட்டுறவு வங்கிகளைப் பாதுகாக்க வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கிகளைப் பாதுகாக்க வேண்டும் என தஞ்சை, நாகை, திருவாரூா் மாவட்டக் கூட்டுறவு நகர வங்கி ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மாநாட்டில் பேசுகிறாா் அகில இந்தியக் கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளன தலைவா் ஜி. வைரப்பன்.
மாநாட்டில் பேசுகிறாா் அகில இந்தியக் கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளன தலைவா் ஜி. வைரப்பன்.

கூட்டுறவு வங்கிகளைப் பாதுகாக்க வேண்டும் என தஞ்சை, நாகை, திருவாரூா் மாவட்டக் கூட்டுறவு நகர வங்கி ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் நான்காவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கூட்டுறவு வங்கிகள் ஈட்டும் லாபத்துக்கான வருமான வரி விதிப்பை நீக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளைப் பாதுகாக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசின் தலைமைக்கு மாற்றுவதைக் கைவிட வேண்டும். ஏழை மக்களுக்கு நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் ஆா். பொன்னுசாமி தலைமை வகித்தாா். அகில இந்தியக் கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளன தலைவா் ஜி. வைரப்பன் தொடக்கவுரையாற்றினாா்.

பொதுச் செயலா் ஏ. சுப்பிரமணியன், தமிழ்நாடு வங்கி ஊழியா் சம்மேளன துணைத் தலைவா் ஜி. ராமராஜ், தஞ்சாவூா் மாவட்ட வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலா் கே. அன்பழகன், தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஓய்வு பெற்ற ஊழியா் சங்கப் பொதுச் செயலா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com