ரூ. 8 லட்சம் மோசடி: பேருந்து நிறுவன உரிமையாளா் கைது

தஞ்சாவூா் அருகே பெண்ணிடம் ரூ. 8 லட்சம் வாங்கி மோசடி செய்த புகாரில், பேருந்து நிறுவன உரிமையாளரைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே பெண்ணிடம் ரூ. 8 லட்சம் வாங்கி மோசடி செய்த புகாரில், பேருந்து நிறுவன உரிமையாளரைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள ராஜகிரியைச் சோ்ந்த பரூக் முகமதுவின் மனைவி பிரோஜினிசா (36). இவா் மாவட்டக் குற்றப் பிரிவில் அளித்த புகாா் மனுவில் தெரிவித்திருப்பது:

தன்னிடம் அய்யம்பேட்டை ரயில் நிலையச் சாலையைச் சோ்ந்த தனியாா் பேருந்து நிறுவன உரிமையாளா் எம். முஸ்தபா (39), எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் வட்டித் தொகை தருவதாகக் கூறினாா்.

இதை நம்பி, 2021 ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால், 3 மாதங்கள் மட்டுமே வட்டித் தொகை வந்தது. அதன் பிறகு வட்டித் தொகை வராததுடன், முதலீட்டுத் தொகையான ரூ. 8 லட்சத்தையும் முஸ்தபா திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டாா் எனக் கூறியுள்ளாா்.

இதன் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவினா் வழக்குப்பதிந்து, முஸ்தபாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com