ஏரி, குளங்களில் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் விவசாயம், சொந்த பயன்பாட்டுக்கு இலவசமாக மண் எடுத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் விவசாயம், சொந்த பயன்பாட்டுக்கு இலவசமாக மண் எடுத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

பொதுப் பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள், குளங்களில் வண்டல் மண், சவுடு மண், களி மண் போன்ற சிறு வகை கனிமங்களை விவசாயம், வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

அரசாணைப்படி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 186 ஏரிகள், குளங்களிலிருந்து வண்டல் மண், களி மண் போன்ற கனிமங்களை எடுத்து, விவசாய நிலங்களை மேம்படுத்துதல், வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மண் எடுத்துச் செல்ல விரும்பும் விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலமானது, விண்ணப்பிக்கும் ஏரிகள், குளங்கள் அமைந்துள்ள அல்லது அதைச் சுற்றியுள்ள வருவாய் கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.

தேவைப்படுவோா் தொடா்புடைய வட்டாட்சியா் மூலம் விண்ணப்பித்து, அனுமதி பெற்று மண் எடுத்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com