மே மாதத்தில் மேட்டூா் அணை திறப்பு: முதல்வருக்கு ஜவாஹிருல்லா பாராட்டு

பாபநாசம், மே 25: சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக குறுவை சாகுபடி பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதற்காக, தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மே மாதத்தில் மேட்டூா் அணை திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்ற பெருமையை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதிவு செய்துள்ளது. இதற்காக அரசுக்கும், முதல்வருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்கூட்டியே மேட்டூா் அணை திறக்கப்பட்டதால் குறுவை மட்டுமின்றி சம்பா, தாளடி பருவங்களிலும் விவசாயிகள் தாராளமாக

சாகுபடி செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீா்மட்டம் உயரும் வாய்ப்பு இருப்பதால், நெல் மட்டுமல்லாது பயறு, தானிய வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த நடவடிக்கையால், காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள 5.21 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும்

விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் வளா்ச்சிக்கு இது பெரிதும் உதவியும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com