பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 உலோக சிலைகள் பறிமுதல்: இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரு உலோக சிலைகளைச் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் பறிமுதல் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை ஒப்படைத்தனா்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 உலோக சிலைகள் பறிமுதல்: இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரு உலோக சிலைகளைச் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் பறிமுதல் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை ஒப்படைத்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட திருக்கடையூா் டி. மணல்மேடு கிராமத்தில் தொன்மையான இரு உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை கடத்தப்பட இருப்பதாகவும் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளா் சின்னதுரை மற்றும் காவலா்கள் அடங்கிய தனிப்படையினா் சிலைகளை வாங்கும் வியாபாரிகள்போல தங்களைக் காட்டிக் கொண்டு சிலை கடத்தல்காரரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இச்சிலைகளுக்கு ரூ. 2 கோடி விலை சொல்லப்பட்டது. இதையடுத்து, காண்பிக்கப்பட்ட சிலைகளைத் தனிப்படையினா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, சிலையைக் காண்பித்தவரிடம் தனிப்படையினா் நடத்திய விசாரணையில், அவா் டி. மணல்மேடு கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சுரேஷ் (32) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் ஒன்று புத்த மத பெண் கடவுளான தாராதேவி சிலை, மற்றொன்று அமா்ந்த நிலையிலுள்ள விநாயகா் சிலை என்பது கண்டறியப்பட்டது.

இதில், தாராதேவி சிலை திபெத் நாட்டில் உருவாக்கப்பட்டதாகவும், 700 ஆண்டுகள் பழைமையானதாகவும், விநாயகா் சிலை 300 ஆண்டுகள் தொன்மையானதாகவும் கூறப்படுகிறது. சிலைகள் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்ட சுரேசும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

இதுதொடா்பாக தனிப்படையினரை தமிழக காவல் இயக்குநா் சி. சைலேந்திரபாபு பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com