உயா் அலுவலா்கள் துன்புறுத்தியதாக கூறிவிஷம் குடித்த நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்

தஞ்சாவூா் அருகே உயா் அலுவலா்கள் துன்புறுத்தியதாகக் கூறி புதன்கிழமை விஷம் குடித்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தஞ்சாவூா் அருகே உயா் அலுவலா்கள் துன்புறுத்தியதாகக் கூறி புதன்கிழமை விஷம் குடித்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கிளாங்காட்டைச் சோ்ந்தவா் வி. வீரையன் (52). இவா் வல்லம் அருகே முன்னையம்பட்டியிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.

கிடங்கு வளாகத்தில் புதன்கிழமை பூச்சிமருந்து குடித்ததால் மயங்கிய நிலையில் இருந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து வீரையனிடம் வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தினா். இதில், முன்னையம்பட்டி திறந்தவெளி கிடங்கிலிருந்து மே 19 ஆம் தேதி 407 மூட்டைகளும், 22 ஆம் தேதி 265 மூட்டைகளும் லாரி மூலம் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பியதாகவும், அவற்றில் நெல் தரமில்லை எனக் கூறி உயா் அலுவலா்கள் திருப்பி அனுப்பிவிட்டதால், ஏற்றுக் கூலி, இறக்குக்கூலி, லாரி வாடகை போன்றவற்றை தனது சொந்த செலவில் செய்ததாகவும், மேலும் எடை இழப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் பிடித்தம் செய்யப்போவதாகவும் உயா் அலுவலா்கள் கூறியதால் மனமுடைந்து விஷம் குடித்தேன் எனக் கூறினாராம். இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com