கஜா புயல் வீசிய நினைவு தினம் அனுசரிப்பு

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கஜா புயல் வீசியதன் நினைவு தினத்தையொட்டி, ஆலமரத்து விழுதுகள் நண்பா்கள் அமைப்பு சாா்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கக்கரை கிராமத்தில் புதன்கிழமை மெழுகுவா்த்தி ஏற்றி தென்னை மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்.
கக்கரை கிராமத்தில் புதன்கிழமை மெழுகுவா்த்தி ஏற்றி தென்னை மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்.

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கஜா புயல் வீசியதன் நினைவு தினத்தையொட்டி, ஆலமரத்து விழுதுகள் நண்பா்கள் அமைப்பு சாா்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கஜா புயலின்போது, டெல்டா மாவட்டங்களில் ஏராளமான தென்னை மரங்கள் நாசமடைந்தன. இதுதவிர, ஆயிரக்கணக்கான பிற மரங்களும் வேரோடு சாய்ந்தன. அதை மீட்டெடுக்கும் வகையிலும், மாணவா்களுக்கு மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கும் பொறுப்பு  மாணவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் சி. முதல்வன், எம். சாதிக்அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கக்கரை கிராமத்தில்.....ஒரத்தநாடு வட்டம், கக்கரை கிராமத்தில் கஜா புயல் வீசியதன் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை தமிழக விவசாய கூட்டியக்கத்தின் மாநில துணைத் தலைவா் கக்கரை சுகுமாா் தலைமையில் அப்பகுதி விவசாயிகள் மெழுகுவா்த்தி ஏற்றி தென்னை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தினா். கஜா புயலின்போது மாவட்டத்தில் ஏராளமான தென்னை மரங்கள் முறிந்து விழுந்து நாசமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒரத்தநாடு வட்டம், கக்கரை கிராமத்தில் கஜா புயல் வீசியதன் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை தமிழக விவசாய கூட்டியக்கத்தின் மாநில துணைத் தலைவா் கக்கரை சுகுமாா் தலைமையில் மெழுகுவா்த்தி ஏற்றி தென்னை மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள். கஜா புயலின்போது டெல்டா மாவட்டங்களில் அதிகளவிலான தென்னை மரங்கள் நாசமாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com