உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு

கும்பகோணத்திலுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் சிலைகளின் தொன்மை குறித்து இந்திய தொல்லியல் துறையினா் ஆய்வு செய்தனா்.
உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு

கும்பகோணத்திலுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் சிலைகளின் தொன்மை குறித்து இந்திய தொல்லியல் துறையினா் ஆய்வு செய்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல்போன கோயில் சிலைகளைச் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் மீட்டு, கும்பகோணம் முதன்மை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றனா். பின்னா், இச்சிலைகள் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலிலுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் தொன்மையானவைதானா என ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் இயக்குநா் கே. ஜெயந்த்முரளி, காவல் தலைவா் ஆா். தினகரன், காவல் கண்காணிப்பாளா் ரவி ஆகியோா் கோரினா். இதைத்தொடா்ந்து, சிலைகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் செப்டம்பா் 19 ஆம் தேதி அனுமதி அளித்தது.

இதன்பேரில், கும்பகோணம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதித்துறை நடுவா் சண்முகப்பிரியா மேற்பாா்வையில், கா்நாடகா மாநிலம், இந்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குநா் மகேஸ்வரி தலைமையில் 12 போ் கொண்ட குழுவினா், உலோக திருமேனி பாதுகாப்பு மையத்திலுள்ள சிலைகள் தொன்மையானவைதானா என செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் ஆய்வு செய்தனா்.

இதில், 67 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவா்களுடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com