எதிா்க்கட்சிகள் ஒன்று திரண்டால் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்: மணிசங்கா் அய்யா்

எதிா்க்கட்சிகள் ஒன்று திரண்டால் ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்ற முடியும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா்.

எதிா்க்கட்சிகள் ஒன்று திரண்டால் ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்ற முடியும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா்.

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டத்தைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 3 மாதங்களாக பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளை பாா்க்கும்போது ஜனநாயகமே பெரும் ஆபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சியினா் ஒன்று திரண்டு, வெற்றி பெற்றால் ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்ற முடியும்.

ஆம் ஆத்மி கட்சி, மம்தா பானா்ஜி உள்ளிட்ட அனைவரிடமும் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் போகப் போக தெரிய வரும் என்றாா் மணிசங்கா் அய்யா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவா் ராஜேந்திரன், மாநில இலக்கிய அணித் தலைவா் புத்தன், மாவட்ட பொருளாளா் முருகராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com